Skip To Content

வாழ்வின் நிகழ்வுகள்

இப் பகுதியில் சிறப்பு நிகழ்வுகளிற்கான தகவல்களை பெற்றுக்கொள்ளலாம்:

ஞானஸ்நானம்: ஒருவரை சபை அங்கத்தவராக ஏற்றுக்கொள்ளும் சடங்காசாரம்

திடப்படுத்தல்: ஞானஸ்நானத்தின் போது ஏற்படுத்திய உடன்படிக்கைகளை முறைப்படி உறுதிப்படுத்தும் நிகழ்வு

திருமணம்: இருவரிடையே உண்டாகும் ஐக்கியத்தை கிறிஸ்த்துவினோடும் முழு கிறீஸ்தவ குடும்பத்தோடும் ஏற்படுத்திக்கொண்ட உறவின் அடிப்படையில் கொண்டாடும் வைபவம்.

மரண சடங்கு: மரித்தோர் உயிர்த்தெழுதலின் விசுவாசத்தையும் நம்பிக்கையையும் நினைவுகூர்ந்து இழப்புக்கு உள்ளானோரின் துயரத்தில் பங்கு கொள்ளும் நிகழ்வு

ஞானஸ்நானம்

ஞானஸ்நானம் (“கழுவுதல்” என்ற கிரேக்க வினைச் சொல்லிருந்து) என்பது கிறிஸ்துவை ஏற்றுக் கொண்ட அனைவரும் திருச்சபை என்னும் ஐக்கியத்தில் தம்மை இணைத்துக் கொள்வதற்கான முதல் சடங்காசாரம். கிறீஸ்த்தவர் அனைவரும் பெரியவராயினும் சிறியவராயினும் நீரினால் பரிசுத்த திருத்துவத்தின் பெயராலே: பிதா, குமாரன், பரிசுத்த ஆவியால் ஞானஸ்நானத்தை பெற்றுக் கொள்கின்றனர். 

ஞானஸ்நானம் இயேசு நாதர் வலியுறுத்திய இரண்டு புனித சடங்காசரங்களில் ஒன்றாகும். மற்றது தூய நற்கருணை என்று அழைக்கப்படும் திரு விருந்தாகிய அப்பமும் திராட்சை இரசமுமாகும்.   

தனி நபர்களாகவே ஞானஸ்நானத்தை பெற்றுக் கொண்டாலும்,  கீழ் கூறபட்டவற்றை நிறைவேற்ற  உறுதி கொண்டுள்ள விசுவாசமுள்ள சமூகத்தினருடன் தம்மை இணைத்துக் கொள்கின்றனர்:

  • தளர்ந்து போகாமல் தீமையை எதிர்த்து செயல்படுதல்l
  • கடவுள் மன்னிக்கிறது போல ஒருவரை ஒருவர் மன்னித்தல்.
  • கிறிஸ்த்து நாதரை எல்லோரிடத்திலும் கண்டறிந்து பணி புரிதல்
  • ஒவ்வொரு மனிதரின் தனித்துவமான கண்ணியத்தையும் மதித்து நீதியையும் சமாதானத்தையும் பேண முயற்சித்தல்
  • கடவுளின் சிருஷ்டிப்பினை பாதுகாப்பதுடன்
  • பூமியில் வாழ்வதனை மதிப்புடன் பேணி புதிப்பித்தல் 

ஞானஸ்நானத்திற்கென பிள்ளைகளை அழைத்து வரும் பெற்றோர் தமது பிள்ளைகளை கிறிஸ்தவ சமூகத்தின் விசுவாச வாழ்க்கையில் வளர்க்கும் பொறுப்பினை உறுதிப்படுத்துகின்றனர்.

ஞானஸ்நானம் பெற்ற அனைவரும் தமது நேரத்தையோ, தமது தாலந்துகளையோ அல்லது நிதி வழங்களையோ தேவ ஊழியத்திற்காக கொடுக்கும்படி ஊக்குவிக்கப்படுகின்றனர்.

பிள்ளை பேற்றுக்கான நன்றி அறிவிப்பு

பிள்ளை பேற்றுக்கான நன்றி துதி ஆராத்தனை சபைகளில் நடத்தலாம். இந்த ஆராதனை தாம் பெற்றுக் கொண்ட பிள்ளைக்கான நன்றி செலுத்தும் தருணத்தையும், தேவ தயவிற்காக ஜெபிக்கும் தருணத்தையும் பெற்றோருக்கு வழங்கின்றது.  

அடுத்து நடப்பவை

நீங்கள் அல்லது உங்கள குழந்தைக்கு ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ள விரும்பினாலோ அல்லது பிள்ளை பேற்றுக்கான நன்றி துதி ஆராதனை நடத்த விரும்பினாலோ உங்கள் சபை போதகரிடம் அல்லது contact your local Anglican church  என்ற தேடல் மூலமோ தொடர்பு கொள்ளுங்கள்.

திடப்படுத்தல்

திடப்படுத்தலின் போது ஞானஸ்நானத்தினால் கிறீஸ்துவுடன் ஏற்படுத்திய உடன்படிக்கைகள் மீண்டும்  புதிப்பிக்கப்பட்டு உறுதிப்படுத்தப்படுகின்றன. இது உங்கள் விசுவாச பாதையிலே முக்கிய பாகமாக விளங்குகின்றது. நண்பர்கள், உறவினர், மற்றும் கிறிஸ்தவ சமூகம் உங்களுக்கு உத்தரவாதமாக செயல்படுவர்.        

திடப்படுத்தல் எமது ஆதினத்தில், பேராயர் உங்களது சபைக்கு வருகை தரும் பொழுது அல்லது செனற். ஜேம்ஸ் கத்தீட்றலில் நடைபெறும் வருடாந்த்த ஆதீன திடப்படுத்தல் ஆராதனையின் போது நடை பெறுகின்றது.  உங்கள் சபை போதகருடன் தொடர்பு கொள்வதே இதற்கான முதல் படியாகும்

ஏற்கனவே திடப்படுத்தலை பெற்றிருந்தால் கிறிஸ்த்துவுடன் ஏற்படுத்திய உடன்படிக்கையை முறைப்படி மீண்டும் உறுதிப்படுத்தலாம். 

திருமணம்

இருவரிடையே உண்டாகும் ஐக்கியத்தை கிறிஸ்துவினோடும் முழு கிறிஸ்தவ குடும்பத்தோடும் ஏற்படுத்திக்கொண்ட உறவின் அடிப்படையில் கொண்டாடும் வைபவம் திருமணமாகும்.

அங்கிலிக்கன் திருமணங்கள் வழமையாக ஆலயங்களில் தான் நடைபெறுகின்றன, இருப்பினும் பேராயரின் அனுமதியுடன் வேறு இட.ங்களிலும் நடத்தப்படலாம்.  இதற்கான விவரங்களை உங்கள் சபை போதகரிடம் பெற்றுக்கொள்ளலாம்.   

திருமணம் செய்து கொள்ள விருமபுவர் திருமண தினத்திற்க்கு குறைந்த்து 90 நாட்களுக்கு முன்னமே சபை போதகரிடம் தொடர்பு கொள்ள வேண்டும். இப்படி செய்வதால் திருமண ஆயத்தங்கள் மேற்கொள்ளவும்,  திருமண ஆராதனையைக் குறித்த விபரங்களை சபைப் போதகருடன் கலந்துரையாடவும் போதிய நேரம் உங்களுக்கு கிடைக்கும். மேலும் திருமணத்தை குறித்த உங்கள் சபையின் கொள்கைகளை அறிந்து கொள்ளவும் வசதி ஏற்படுகின்றது.     

அங்கிலிக்கன் சபைகளில் விவாகரத்து பெற்றுக்கொண்டவரரும் திருமணம் செய்துகொள்ளலாம் ஆயினும் சபை போதகர் முதலில் பேராயரிடமிருந்து அனுமதி பெற்றுக்கொள்ள வேண்டும்.

திருமண கொள்கைகள்

ஒவ்வொரு சபையும் தனிப்பட்ட திருமண கொள்கைகளை கொண்டுள்ளன. சிலர் எல்லா தம்பதிகளையும், தமது சபை அங்கத்தவர் அல்லாதவரைக் கூட வரவேற்பர். வேறு சிலர் அங்கத்தவத்தின் மீது கடினாமான எதிர்பார்ப்புக்கள் உடையவராயும் இருப்பர்.  ஒவ்வொரு சபையும் தமக்கென்ற கட்டணங்ங்களை வரையறுத்து கொள்கின்றனர்.   

திருமணம் செய்பவரில் ஒருவராவது ஞானஸநானத்தை பெற்றிருக்க வேண்டும் என்பது ஆதீனத்தின் நியதி, அத்தோடு தம்பதிகள் அங்கிலிக்கன் ஆலயத்தில் திருமணம் செய்யவதற்கான ஆயத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்பதையும் ஆதீனம் எதிர்பார்கின்றது.  

அடுத்து நிகழ்பவை

திருமணங்களை குறித்து மேலதிக தகவல்களுக்கு நீங்கள் எந்த அங்கிலிக்கன் ஆலயத்தில் திருமணம் செய்ய விரும்புகிறீர்களோ அந்த சபை போதகரிடம் தொடர்பு கொள்ளுங்கள்.  ரொரன்ரோ ஆதினத்தில் ஒரு ஆலயத்தை கண்டு கொள்ள Find a Church என்ற தேடல் தளத்திற்கு செல்லுங்கள். 

ஒரே பாலின திருமணம்

அத்தியட்ச ஆதினத்தின் அநேக ஆலயங்களில் ஒரே பால்-திருமணங்களோ அல்லது திருமண ஆசீர்வாதங்களோ நடத்தப்படுகின்றன.  மேலதிகமாக அறிந்து கொள்ள Same-Sex Marriage pageஎன்ற தளத்திற்கு செல்லவும்.

இறுதி சடங்குகள்

பூலோக வாழ்வின் முடிவே கிறிஸ்த்துவிலே நாம் அடையப்போகும் மகிமை என்பது கிறிஸ்தவரின் அடிப்படை நம்பிக்கை. அங்கிலிக்கன் சபையினர் மரித்தோர் உயிர்த்தெழுதலின் விசுவாசத்தையும் நம்பிக்கையையும் நினைவுகூர்ந்து இழப்படைந்தோரின் துயரத்தை பகிர்ந்து கொள்ளும் நிகழ்வாகவே மரணச் சடங்குகளை அனுசரிக்கின்றனர்.    

உங்களுக்கு அன்பானவர் மரணத் தறுவாயில் இருந்தால் அல்லது மரித்துப் போனால் உங்கள் சபை போதகர் உங்கள் துயரமான நேரங்களில் உங்ளுக்கு உறுதுணையாய் இருப்பதற்கு தயங்கமாட்டார். 

ஆராதனைகள் 

கனடாவின் அங்கிலிக்க திருச்சபை பல விதமான வழிபாட்டு முறைகளை தமது ஆலய ஆராதனை ஜெப புத்தகங்கள் மூலம் வழங்குகின்றனர்.  இந்த வழிபாட்டு முறைகள் குடும்பத்தினரும் நண்பர்களும் பங்கு பற்றுவதற்கான பல் வேறுபட்ட சந்தர்பங்களை அளிக்கின்றன.

சபை போதகரும் குறிப்பிட்ட குடும்பமும் சேர்ந்து பிரிந்து போனவரை முறைப்படி நினைவு கொள்ள வேண்டிய ஆராதனை ஒழுங்கு முறை, வேத வாசிப்புக்கள், வாத்தியங்கள், வேத வாசிப்பாளர்கள், ஜெப நடத்துனர், போன்ற ஆயத்தங்களை செய்வர்.  

மரண ஆராதனையில் பாவிக்கப்படும் ஜெப புத்தகம் பூதஉடல் அல்லது தகனமான  உடல் முன்னிலையில் தான் உபயோகிப்படுகின்றது. ஆலயத்தில் நடத்தப்படும் ஆராதனையோடு கூட பிரேத சாலைகளிலோ, மரண மண்டபங்களிலோ, தகன நிலையங்களிலோ ஆராதனைகள் நடத்தப்படலாம். நினைவு கூரல் ஆராதனை நடத்துவதற்கும் விண்ணப்பிக்கலாம். 

அடுத்து நடப்பவை

அங்கிலிக்கன் மரண சடங்கு ஆராதனை சம்பந்தமான மேலதிக தகவல்களை பெற்றுக் கொள்ள உங்கள் சபை போதகரிடம் local parish priest தொடர்பு கொள்ளலாம் அல்லது உங்களை மரண மண்டப நடத்துனரிடம் தொடர்பு படுத்தும் படி அங்கிலிக்கன் போதகரிடம் வேண்டிக் கொள்ளலாம்.