Skip To Content

அங்கிலிக்கன் ஆகுதல்

உங்கள் அண்மையில் உள்ள அங்கிலிக்கன் ஆலயத்திற்கு தொடர்ந்து செல்வதாலும் ஆலய செயல்பாடுகளில் (அதன் “ஆவிக்குரிய சேவைகள்” ) ஊக்கத்துடன் பங்கு பற்றுவதாலும் கனடாவின் அங்கிலிக்கன் ஆலயத்தின் (“ஒரு அங்கிலிக்கன்”) உறுப்பினராக மிகவும் சுலபமாக மாறலாம்.

அங்கிலிக்கர்களை அறிந்து கொள்வதற்கான சிறந்த முறை அவர்கனளுடன் இணைந்து வழிபடுவதே worship with us ஆகும். ஏனெனில் அவர்கள் தமது வழிபாட்டு முறையின் மூலம் தமது நம்பிக்கையை தெரியப் படுத்துகின்றனர். ஏற்கனவே ஞானஸ்நானம் பெற்றவராயோ, முதல் முறையாக அங்கிலிக்ன் ஆலயத்திற்கு வருபவராகவோ இருந்தாலும் உங்களை அங்கிலிக்கன் ஆலயம் சிறப்பாக வரவேற்கின்றது.

கிறிஸ்தவத்தை அறியாதவராய் இருந்தால், அல்பா அல்லது பில்கிறிம் போன்ற கிறிஸ்த்தவ அடிப்படை பாடநெறிகளை Christian basics course அறிந்து கொள்ளலாம். வெவ்வேறான சபைகள் வெவ் வேறுபட்ட போதனை பயிற்சிகளை வழங்கலாம், உங்களது ஆலயத்துடன் தொடர்பு கொள்வதன் மூலம் மேலதிக அறிவை பெற்றுக்கொள்ளலாம்.

உங்களுக்கு அண்மையில் உள்ள அங்கிலிக்கன் ஆலயத்தை கண்டு கொள்ள Find a Church என்ற இணைய தளத்தில் தேடுங்கள்.

முறைப்படுத்தல்

நீங்கள் எந்த கிறிஸ்தவ சபையிலோ அல்லது எந்த பிரிவிலோ திருத்துவத்தின் பேரில் ஞானஸ்நானம் பெற்றிருந்தாலும் உங்களது ஞானஸ்நானம் எந்த அங்கிலிக்கன ஆலயத்திலும் ஏற்றுக் கொள்ளப்படும். .   

ஏற்கனவே ஞானஸ்நானம் பெற்றவராயிருந்தால் அங்கிலிக்ன் ஆலயத்தின் பேராயர் முன்பாக முறைப்படி உங்கள் விசுவாசத்தை பிரகடனப்படுத்தலாம். ஞானஸ்நானம், திடப்படுத்தல், அங்கிலிக்ன் ஆலயத்தில் அங்கீகாரம் பெறுதல் என்பவற்றை அறிந்து கொள்ள Life Events என்ற பக்கத்திலிருந்து அல்லது உங்கள் சபைக் குருவானவரிடம் கேட்டறியலாம்.

Diocese of Toronto Diocesan Confirmation St. James Cathedral