Skip To Content

அங்கிலிக்கனாய் இருத்தல்

கிறிஸ்தவம்

கனடாவின் அங்கிலிக்க சபை உலகளாவிய கிறிஸ்தவ சபைகளின் ஒரு பகுதியாக உள்ளது. உலகம் முழுவதிலிலும் இரண்டு பில்லியனுக்கும் அதிகமான கிறிஸ்தவர்கள் உள்ளார்கள்.

முதலாம் நூற்றாண்டில் பலஸ்தீன தேசத்திலே வாழ்ந்த போதகரான, நாசரேத் ஊரை சேர்ந்த இயேசு நாதர் உண்மையிலே மனித உருவெடுத்த தெய்வம் என கிறிஸ்தவர்கள் நம்புகிறார்கள். இயேசு கிறிஸ்த்து தன் வாழ்க்கை, மரணம், உயிர்தெழுதல் ஆகியவற்றால் எம்மை மீட்டு இரட்சித்ததால், நாம் அவருடைய போதனைகளை பின்பற்றுகின்றோம்.

கிறிஸ்தவரின் நான்கு பிரதான பிரிவுகள்:

  1. ஒத்தொடொக்ஸ் சபை, கிழக்கத்திய, ஓறியன்டல்
  2. ரோமன் கத்தோலிக்க சபை
  3. அங்கிலிக்கன் சபை
  4. புரட்டஸ்த்தாந்த சபைகள்

அங்கிலிக்கன் சபைகள் புரட்டஸ்த்தாந்த, கத்தோலிக்க பாரம்பரியங்களை உள்ளடக்கியதாக உள்ளது. 

நீங்கள் கிறிஸ்தவத்திற்கு முற்றிலும் புதிதானவராக இருந்தால், இயேசு கிறிஸ்த்துவையும் கிறிஸ்தவ விசுவாசத்தை குறித்தும் மேலும் அறிந்து கொள்ள விரும்பினால் the Church of England online  என்ற தேடல் தளத்திற்கு செல்லுங்கள்.

அங்கிலிக்கன் திருச்சபை

அங்கிலிக்கர்களின் கிறிஸ்தவ விசுவாசம் ஆதி திருச்சபையில் ஆரம்பித்து பல நூற்றான்டு காலங்களாக வடிவமைக்கப்பட்டு ஆழ்ந்த பாரம்பரியத்தில் வேரூன்றி வளர்ந்ததாகும்.

அங்கிலிக்கர்கள்:

  • புனித வேதாகமத்தை அதிகார பூர்வமான முதன்மையான ஆதாரம் என எண்ணி தழுவுகின்றனர்
  • அப்போஸ்தல நைசீய விசுவாசப் பிரமாணங்கள் எமது விசுவாச அறிக்கைக்கு போதுமானது என்று ஏற்றுக்கொள்கின்றனர்
  • கிறிஸ்த்து நாதரால் நியமிக்கப்பட்ட இரண்டு புனித  சாக்கிரமென்துகளாகிய ஞானஸ்நானம் திருவிருந்து என்பவற்றை கடைப்பிடிக்கின்றனர்
  • வராலாறு தோறும் வழங்கி வந்த எப்பிஸ்கொப்பேற் பாரம்பரியத்துடன் இயங்கி வருகின்றது (முதல் அப்போஸ்தலர் தொடக்கம் பேர் ஆயர்களிடம் தொடர்ந்து கையளிக்கப்படும் சுவிசேஷ பணி)

உலகத்தில் உள்ள எல்லா அங்கிலிக்கர்களும் பொதுவான நம்பிக்கையையும், common beliefs பழக்க வழக்கங்கழையும், வழிபாட்டு முறைகளையும் ways of worship  கொண்டவர்களாக தம் சொந்த இடங்களுக்கேற்றவாறு பல பாஷைகளிலும் சம்பிரதாயங்களிலும் வழிபட்டு வருகின்றனர்.  

அனைத்து உலகம் எங்கும் உள்ள அங்கிலிக்கரின் குடும்பம் அங்கிலிக்கரின் ஐக்கியம் Anglican Communion என்று அழைக்கப்படுகின்றது. அதனுள் 165 நாடுகளும் 80 மில்லியன் அங்கத்தவரும் அமைந்துள்ளனர். அவற்றின் சபைகளுக்கும், அத்தியட்சாதீனங்களுக்கும், மாகாணங்களுக்கும் ஜெபத்தின் மூலமும், வழங்களை பகிர்ந்து கொள்வதன் மூலமும், ஒருவரை ஒருவர் தாங்கி உதவி ஒத்தைசைகளை வழங்கி வருகின்றனர்.      

ஐக்கியத்தில் உள்ள ஒவ்வொரு தேசீய அல்லது பிராந்திய சபைகளும் தமது சுய ஆட்சியைக் கொண்டவர்கள். அவர்களின் ஆவிக்குரிய தலைவரும் அவர்கள் ஒற்றுமையின் அடையாள சின்னமாக விளங்குபவர் (கன்ரபெரியின்  பிரதம பேராயர்)  Archbishop of Canterbury ஆவார். 

அங்கிலிக்கரின் வரலாறு

இங்கிலாந்து சபையே கனடாவின் அங்கிலிக்கன் சபைக்கு வேரிட்டது. மூன்றாம் நூற்றாண்டு தொடக்கம் கிறிஸ்தவ சமயம் இங்கிலாந்தில் இருந்து வருகின்றது.  16ம் நூற்றாண்டில் ஏற்பட்ட மறுமலர்ச்சியின் போது இங்கிலாந்து சபை ரோமன் கத்தோலிக்க சபையிலிருந்து சுதந்திரம் அடைந்தது. இங்கிலாந்து சபையை குறித்த மேலதிக விபரங்களை the Church of England website என்ற இணைய தளத்திற்கு சென்று வாசித்தறியலாம்.

அங்கிலிக்கனிஸம் விருத்தியடைந்து இங்கிலாந்து நாட்டுக்கு வெளியே இரண்டு கட்டங்களாக பரவியது:

  1. 17ம் நூற்றாண்டில் தொடங்கி குடி அமர்வு பிரதேசங்களாகிய ஐக்கிய அமெரிக்கா, அவுஸ்ரேலியா, கனடா, நியூசீலாந்து, தெற்கு ஆபிரிக்கா, இந்தியா, மேற்கிந்தய தீவுகள், கயனா வரைக்குமான இடங்களில் ஸ்தாபிக்கப்பட்டது.
  2. 18ம் நூற்றாண்டு தொடங்கி சுவிசேஷ பணிபுரிந்தோர் ஆசியா, ஆபிரிக்கா லத்தின் அமரிக்கா ஆகிய இடங்களில் அங்கிலிக்கன் சபைகளை ஸ்தாபித்தனர். 

கனடாவின் அங்கிலிக்கன் சபையின் வரலாற்றை குறித்த மேலதிக தகவல்களை வாசித்தறிய ஒரு சுருக்கமான வரலாறு A Brief History என்ற இணைய தளத்திற்கு செல்லுங்கள். 

அங்கிலிக்கனிஸம் அல்லது கிறிஸ்தவம் குறித்த மேலதிக கேள்விகள் இருக்கின்றனவா? உங்கள் சபை போதகர் அவற்றிற்கான மேலதிக தகவல்களை மன மகிழ்வுடன் உங்களுக்கு பகிர்ந்து கொள்ளுவார். உங்களுக்கு அண்மையிலுள்ள சபையை Find a Church/Cleric என்ற இணைய தளத்தில் கண்டறிந்து கொள்ளுங்கள்.

இணைய தளங்கள்

மேலதிக தகவல்களுக்கான இணைய தளங்கள்:

கனடாவில்

St. James Cathedral, Toronto

அத்தியட்சாதீனத்தின் கத்தீட்ரல் ஆலயம்

St. John’s Convent

ரொரன்ரோவில் பரிசுத்த யோவானாகிய புனிதரின் பெயர் கொண்ட கன்னியரின்  ஆசிரமம்

Anglican Church of Canada

தேசிய அங்கிலிக்க சபை

The Evangelical Lutheran Church in Canada

எமது ஐக்கியத்தின் பங்காளர்கள்

Dioceses and ecclesiastical provinces

கனேடிய அங்கிலிக்ன் சபையின் பிரதேச, பிராந்திய பகுதிகள்.

The Ecclesiastical Province of Ontario

இதனுள் அல்கொமா, ஹியுறோன், முசொனி, நயகரா, ஒன்ராறியோ, ஒட்டாவா, ரொரன்ரோ ஆகிய அத்தியட்சாதினங்கள் அடங்கும்

Anglican Church Women (Toronto)

அங்கிலிக்கன் பெண்கள் எல்லோரினது செயல்பாடுகளையும் இனம் கண்டு ஏற்றுக்கொள்ளும் பணிப்பிரிவு

Anglican Cursillo Movement

உலகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் எமது கிறிஸ்தவ வாழ்கையை கட்டமைப்பவர்கள்

Anglican Fellowship of Prayer

கனடாவில் ஜெப ஊழியத்தை ஊக்குவிப்பவர்.

Anglican Foundation of Canada

அங்கிலிக்கன் சபைகளினிடையே சுவிசேஷ வேலைகைளை ஆதரிப்பவர்

The Canadian Bible Society

கனடா முழவதுமே வேதாகமத்தை பயன்படுத்த ஊக்கமளிப்பவர்.

Trinity College

ரொரன்ரோ பல்கழைக் கழகத்திலுள்ள அங்கிலிக்கன் கல்லூரி. இங்கு இறையியல் கல்விக்கூடமும் அமைந்தள்ளது.

Wycliffe College

ரொரன்ரோ பல்கழைக் கழகத்தில் அமைந்துள்ள இறையியல் பட்டதாரிகளை பயிற்றுவிக்கும் கல்லூரி

Centre for Christian Studies

அங்கிலிக்கன், யுனைற்றட் சபைகளின் தேசிய இறையியல் கல்வி புகட்டும் கல்வி நிலையம்.

Anglican Renewal Ministries of Canada

சபைகளுக்கு புத்துணர்வு வழங்குபவர்

Contemplative Fire Canada

திருச்சபையை குறித்த புதிய விளக்கம் தருபவர்.

Primate’s World Relief and Development Fund

அவசர கால நிவாரணம், அகதிகள், அபிவிருத்தி, நீதி என்பவற்றிற்கான சேவைகளை கனேடிய அங்கிலிக்கன் சபை மூலம் வழங்குவோர்.

justgeneration.ca

பிறைமற்றின் உலக நிவாரண அபிவிருத்தி நிதி உதவியின் இளைஞர்களின் ஆக்கம்.

KAIROS

ஒன்றிணைந்த பல்வேறு சபைகளின் இயக்கமும், சூழல் நீதியும் மனித உரிமை இயக்கமும் இணைந்தது

Mission to Seafarers

கடல் தொழில் புரிவோரினதும் அவரது குடும்பங்களினதும் நலம் பேணுவோர்.

Women’s Inter-Church Council of Canada

சமூக நீதி, பெண்கள் விடயங்கள், ஒருங்கிணைந்த பல்வேறு சபைகளின் செயல்பாடு, பெண்களின் ஆவிக்குரிய வளர்ச்சி ஆகியவற்றில் கவனம் காட்டும் இயக்கம்