அங்கிலிக்கன் சபை நீண்ட வரலாற்றை உள்ளடிக்கியது, ஆகவே நாம் உபயோகிற்கும் சொற்கள் தொன்மை வாய்ந்தவைகளாகவும், பரீட்சயம் அற்றவையாகவும் தோன்றலாம். எனவே இந்த சொல் பட்டியல் அங்கிலிக்கன் சபைகளில் நாள்தோறும் பழக்கத்தில் இருந்து வரும் சகல விஷயங்களையும் விளங்கிக் கொள்ள உங்களுக்கு உதவி புரியும். இந்த அட்வணை பிரமாண்டமானதல்ல, இவற்றுடன் வேறு சொற்களையும் சேர்த்துக்கொள்ள விரும்பினால் let us know என்ற தளத்திற்கு சென்று உங்கள் ஆலோசனகளை பதிவிடுங்கள்.
பரிசுத்த நற்கருணை அனுசரிக்கப்படும் மேசை. வழி பாட்டின் கவனத்தை ஈர்க்கும் பொருட்டு நடுவில் வைக்கப்பட்டிருக்கும்.
பரிசுத்த நற்கருணை அநுசரிப்பதற்கு ஏற்ற விதமாக தேவைப்பட்ட சகல பொருட்களையும் துப்புரவாக்கி ஆயத்தம் செய்யும் குழுவினர். (சில சமயங்களில் இவர்களை “சான்சல் கில்ட்” என்றும் அழைக்கின்றனர்)
ஒரு பெயர் சொல்லாக உபயோக்கும் பொழுது, இங்கிலாந்து சபையிலிருந்து உருவாகிய சபையின் அங்கத்தவரையும் ஐக்கிய நாடுகளில் உள்ள எப்பிஸ்கோப்பல் சபையையும், கனடாவின் அங்கிலிக்க சபையையும் ஏனைய சபைகளையும் குறிக்கின்றது. இந்த சபைகளின் வழமைகள் அல்லது போதனைகளை விபரிக்கும் பொழுது இந்த சொல் உருச் சொல்லாக மாறுபடுகின்றது.
கனடா அங்கிலிக்கன் சபையும், இங்கிலாந்து சபையும் இணைந்து ஐக்கியத்தில் செயல்படும் ஒரேமாதிரியான விசுவாசம், ஒழுங்கு, வழிபாடு என்பவற்றை பின்பற்றும் அனைத்துலக சபைகளும் இதிலடங்கும்.
மாகாண அங்கிலிக்கன் ஐக்கியதின் பிரதிநிதிகளான பேராயர்கள், சபை போதகர்கள், சபை அங்கத்தவர் என்போரை உள்ளடக்கிய குழு. மூன்று வருடங்களுக்கு ஒரு முறை ஐக்கியத்தின் வெவ்வேறு பகுதிகளில் பொது பிரச்சினைகளை கலந்துரையாடுவதற்குகென கூட்டப்படுகின்றது.
கத்தோலிக்க போதனைகளுடனும், வணக்க முறைகளுடனும் தம்மை இனம் கண்டுகொள்வது மட்டுமல்லாது ஆயரின் பிரதமையை பேணும் பாரம்பரியத்தையும் அதிகாரத்த்தையும் கடைப்பிடிக்கும் அங்கிலிக்க கூட்டத்தினர். அங்லோ-கத்தோலிக்க சபையும் கிறிஸ்துவின் புனித உடலும் ஒன்று என்று கருதி சபையின் தெய்வீகத் தன்மைக்கு அதி உன்னத இடம் கொடுப்பதால் அவர்கள் “உயர் சபை” என்றும் அழைக்கப்படுகின்றனர்.
ஆண்டவராகிய இயேசு சீஷர்களுக்கு விட்டு சென்ற அதிகாரமும் சுவிசேஷ பணியும் வம்சாவழியாக அன்றய பேராயர் தொடக்கம் இன்றய பேராயர் வரை விடுபடாமல் தொடர்ந்து வருகின்றது என்ற கோட்பாட்டை கடைப்பிடிப்போர்.
பிறைமற்றினதும் மாகாணங்களினதும் பேராயர்களுக்கு வழங்கப்படும் பெயர்.
அத்தியட்சாதீனத்தில் உள்ள சபைகளுக்கும் சபை குழுக்கழுக்கும் ஏனய தலைமை பீடத்தில் உள்ளோருக்கும் நிர்வாக உதவி வழங்குவற்காக பேராயரால் அமர்தப்பட்ட மதக்குருவானவர்.
ஆர்ச் டீக்கனின் மேற்பார்வையின் கீழ் இயங்கி வரும் அத்தியட்சாதீனத்தின் பிரதேசவாரியான உப பகுதி
கிறீஸ்த்துவின் சரீரமாகிய சபையுடன், நீரினாலும் பரிசுத்த ஆவியினாலும் ஏற்படுத்திக் கொள்ளும் முதல் உறுதிப்பாடே தூய ஞானஸ்நானம் ஆகும். கடவுள் ஏற்படுத்திய இந்த இணைப்பு என்றும் அழியாதது.
அத்தியட்சாதீனத்தின் அதிகாரபூர்வமான செயல்களுக்கும் சபைகளின் தேவைகளை சந்திப்பதற்குமென அத்தியட்சாதீனத்தால் தெரிந்து கொள்ளப்பட்டு பேராயராக அபிஷேகம் பண்ணப்பட்ட ஒரு குருவானவர். கனடாவில் உள்ள எல்லா பேராயரும் தமது சிக்கல்களையும் பிரச்சனைகளையும் கலந்துரையாடவும் சபை அபிவிருத்திக்கான திட்டங்களை வகுத்து திட்டமிடுவதற்காகவும் பேராயர்களின் மனையில் கூடுவர். பேராயர் ஓய்வு பெறும் பொழுது அவருக்கு பதிலாக நியமிக்கப்படும் குருவானவர் கொஅட்யூட்டர் பேராயர் என்று அழைக்கப்படுகின்றார். சப்றகன், உதவி அல்லது பிராந்திய பேராயர்கள் அத்தியட்சாதீன பேராயருக்கு உதவிகள் வழங்கி அத்தியட்சாதீனத்தின் குறித்த பகுதியில் பொறுப்பு வகித்து வந்தாலும் அவர்கள் அப்படியே அத்தியட்சாதீன பேராயராக முடியாது.
அநேகமான கனடா அங்கிலிக்கன் சபைகளில் மாற்று வழிபாட்டு புத்தகம் ஞாயிற்றுக்கிழமை ஆராதனைகளிலும் வேறு முக்கிய வைபவங்களிலும் பிரதம வழிபாட்டு நூலாக உபயோகிக்க படுகின்றது. அதில் நவீன மொழி பிரயோகிக்கப்பட்டிருக்கின்றது.
உலகளாவிய அநேக அங்கிலிக்கன் சபைகள் தம் பிராந்தியங்களுக்கு ஏற்ற மாறுதல்களோடு உபயோகித்து வரும் பாரம்பரியமான ஜெப புத்தகம் இந்த பொதுவான ஜெப புத்தகமாகும் (BCP). முதல் புத்தகம் 1549ம் ஆண்டில் பிரசுரிக்கப்பட்டாலும் பல தடவைகள் திருத்தங்களுக்குள்ளாகி உள்ளது. கனடாவில் உபயோகிக்கும் BCP முதல் தடவையாக 1962ம் ஆண்டில் தொகுக்கப்பட்டது. அத்தியட்சாதீனத்தின் அநேக அங்கிலிக்கன் சபைகள் மாற்று வழிபாட்டு புத்தகத்தை உபயோகித்தாலும் (BAS), சிலர் இன்னும் BCPயையே உபயோகிக்கின்றனர்.
1. ஒரு அனுபவம் நிறைந்த சபை குருவிற்கோ அல்லது சாதரண ஒருவருக்கோ வழங்கப்படும் கௌவரவ பட்டம். கத்தீட்ரலின் (பேராலயத்தின்) கனன் என்பது சபைகளில் புரிந்து வரும் அதி உன்னத சேவையை இனம்கண்டு அவரை கௌரவிக்க பேராயர் வழங்கும் மதிப்புக்குரிய பட்டம்.
2. ஒரு சபையின் அபிவிருத்தியையும் ஒழுக்கத்தையும் கண்காணிக்கும் சபையின் சட்டமாகும். அத்தியட்சாதீன, மாகாண, தேசிய கனன்கள் வழக்கில் உள்ளன. கனனின் சட்ட பூர்வமான விளக்கம் கனன் சட்டம் எனப்படும்.
பேராயரின் ஆசனம் அல்லது அவரது பேராசனமாகிய கத்தீட்ரா வைக்க பட்டிருக்கும் ஆலயத்தை கத்தீட்றல் என்று அழைப்பர். பேராயரின் பேராசனம் அத்தியட்சாதீனத்தில் பிரதம குருவாக அவர் வகிக்கும் பதவியின் அடையாள சின்னமாகும். கத்தீட்றல் தாய் ஆலயமாக திகழ்வதோடு அத்தியட்சாதீனத்தின் பல சிறப்பு நிகழ்சிகளின் மையமாகவும் விழங்குகின்றது.
நற் கருணை ஆராதனைக்காக பிரதிஷ்டை பண்ணப்படும் திராட்சை இரசம் பரிமாறப்படும் நீண்ட தண்டினை கொண்ட பெரிய கிண்ணம் அல்லது அப்படியான ஒரு கலசம்.
பாரம்பரிய கட்டிடகலையின் பிரகாரம் சான்சல் என்பது ஆலயத்தில் பாடகர் குழு அமர்ந்திருக்கும் பகுதி.
சட்டத்தரணி அல்லது நீதிபதியுடன் அனுபவமிக்க சினட் உத்தியோகத்தரை கொண்ட குழு. பேராயருக்கும் சினடுக்கும் கனனையும் குடியியல் சட்டங்களையும் விளக்கி அறிவுரை வழங்குபவர்.
இவர்கள் சபையின் அனுபவமிக்க அங்கத்தவர்கள். சில அத்தியட்சாதீனங்களில், சபை அங்கத்தவரால் தெரியப்பட்வரை மக்களின் வோடன் எனவும் சபைக் குருவானவரால் நியமிக்க்ப்படுபவரை குருவானவரின் வோடன் என்றும் அழைப்பர். வேறு அத்தியட்சாதீனங்களில் சபை அங்கத்தவர்களே இரண்டு வோடன்களையும் தெரிவு செய்வர்.
சபையின் அபிஷேகப்பட்ட உறுப்பினர்கள் (பேராயர்கள், குருக்கள், டீக்கன்கள்).
குருக்கள் கூட்டத்தின் உறுப்பினர்கள்.
ஞானஸ்நானத்தினூடக பரிசுத்த நற்கருணையில் இணைக்கப்பட்டவரும் கிரமமாக அங்கிலிக்கன் ஆலய வழிபாட்டில் பங்கு பெறுபவருமானவர்.
நகரங்கள் ஒன்றிணைவதைப் போல அங்கிலிக்க அத்தியட்சாதீனத்தின் உலகின் பல் வேறு பாகங்களில் உள்ள ஒரே நோக்கான ஈடுபாட்டினால் ஒத்தாசை உதவிகளை வழங்குவதற்காக ஒன்றிணையும் விஷே உறவின் உடன்படிக்கை.
சிறு பிராயத்திலேயே ஞானஸநானத்தை பெற்றுக்கொண்டவர்கள் முதிர்ச்சி அடைந்த பின் அவர்களின் விசுவாசத்தை பிரகடனம் பண்ணி திடப்படுத்தவும், தமது ஞானஸ்நானத்தை பொறுப்புடன் அறிந்து அனுசரிக்கவும், பேராயர் அவர்கள் மேல் கைவைத்து ஆசிர்வதிப்பதற்குமான சந்தர்பமாகும்.
குறிப்பிட்ட சபையின் அங்கத்தவர்கள். திருச்சபை ஒன்றிற்கும் மேற்பட்ட சபைகளை கொண்டதாய் இருக்கலாம்.
ஒரு குருவானவர் பேராயர் ஆவதற்கான வழிபாட்டு ஆராதனை.
ஆலய வழிபாடுகளிலும் வெளி உலகிலும் தொண்டு செய்வதற்காக அபிஷேகம் பண்ணப்பட்டவர்கள். டீக்கன் பரிசுத்த நற்கருணையில் உதவி வழங்கலாமே தவிர தலைமை தாங்க முடியாது. சிலர் நிரந்தரமாக வாழ் நாள் எல்லாம் டீக்கனாக அபிஷேகம் பண்ணப் படுகின்றனர் (நிரந்தர டீக்கன்கள்). ஒரு சிலர் குருவானவர்களாக அபிஷேகம் செய்யப்படுமுன் டீக்கனாகவும் செயல் படுகின்றனர். டீக்கன்கள் சுவிசேஷ திருமறை வாசித்தல், மேசையை ஆயத்தம் செய்வதல், பொதுவான ஜெபங்களை வளி நடத்தல் ஆராதனையை முடிவு செய்தல் ஆகிய வழிபாட்டு கருமங்களை செய்யலாம்
வழக்கமாக கத்தீட்றல் (பேராலயம்) மறை மாவட்டத்தின் ஆயராக பணி புரிபவர். பேராயர் அவருக்கு அத்தியட்சாதீன பொறுப்புக்களையும் வழங்கலாம்.
ஆர்ச் டீக்கனறிக்குள் அடங்கிய பிராந்தியம். இங்கு தான் சபை குருமாரும், சாதரண அங்கத்தவர்களும் கூடி தமது பிராந்தியங்களிலே சபை வளர்சியை நிர்ணயிக்கும் விடையங்களை குறித்து கலந்தாலோசிப்பர். இதன் கூட்டங்களை பிராந்திய டீன் நிர்ணயிப்பார்.
பேராயரின் தலைமையினான டீன்களின் விசேஷ சேவைக்குழு. டயக்கனேற் சகல மக்களுக்கும் சேவை வழங்க பிரத்தியேகமாக ஏழைகளுக்கும், நோய்வாய் பட்டவருக்கும் தனிமையில் இருப்பவருக்கும் இயேசு கிறிஸ்த்துவின் நாமத்தினால் சேவை வழங்கி வருகின்றது.
சினட்டுக்கு இடைப்பட்ட காலத்திலே அத்தியட்சாதீனத்தின் கருமங்களை மேற்பார்வை செய்வதற்கென்று அத்தியட்சாதீன சினட்டிலே பிரதிநிதிகளாக தெரிவு செய்யப்பட்ட குருக்களையும் சாதாரண சபை அங்கத்தவரையும் கொண்ட குழு.
பேராயரின் மேற்பார்வைக்குட்பட்ட கனனின் கோட்பாடுகளுக்கு இணங்க ஏற்படுத்தப்பட்ட ஒரு பிராந்தியத்தின் எல்லா சபைகளும் இதனுள் அடங்கும்.
பேராயரை குறிக்கும் பெயரடை. எப்பிஸ்கொப்போய்(மேற்பார்வையாளர்) என்ற கிரேக்க சொல்லிருந்து உருவானது. ஐக்கிய நாடுகளில் உள்ள அங்கிலிக்கன் சபை எப்பிஸ்கொப்பல் சபை என்றே அழைக்கப்படுகின்றது(or TEC).
பரிசுத்த நற்கருணை அல்லது பரிசுத்த ஐக்கியம் என்று அழைக்கப்படும். ஆண்டவரின் இராப்போசனத்தை நினைவு படுத்தும் பிரதம வழிபாட்டு முறை. நன்றி செலுத்துதல் என்ற லத்தின் மொழியிலிருந்த தோன்றியது.
புறட்டஸ்தாந்த போதனைகளுடன் தம்மை இனம் கண்டு கொண்டவர்களாகவும், புதிதாக்கப்பட்ட பாரம்பரியங்களை பின்பற்றுபவர்களாகவும் வேதத்தை வலியுறித்தி தனி மனிதரின் மன சாட்சிக்கு முக்கியம் கொடுப்பவர்களாகவும் செயல்படும் கூட்டத்தினர். இவர்கள் கிறிஸ்த்து சபைக்கும் அதன் வழிபாட்டு முறைகளை ஒழுங்கமைதற்கும் அதிக சுதந்திரம் வழங்கி உள்ளார் என்னும் நம்பிக்கையில் செயல் படுவதால் இவர்கள் கீழ் சபை என்று அழைக்கப்படுகின்றனர்.
அபிஷேகம் என்னும் சடங்காசாரம், இதன் மூலம் ஒருவர் தேவ பணிக்கு பிரதிஷ்டை செய்ப்படுகிறார். பேராயர், குருக்கள் டீக்கன்கள் ஆகியோரின் கூட்டத்தினை பரிசுத்த கட்டளை என்று அழைக்கின்றனர்.
ஒரு மறை வட்டத்திற்கு பொறுப்பாக பேராயர் நியமனம் செய்யும் குருவானவர். மறை வட்டத்தின் தெரிவு குழுவின் சிபாரிசின் அடிப்படையில் பேராயர் பிரதம சபை குருவை நியமிக்கின்றார்.
பரிந்து மன்றாடுதலின் மூலச் சொல் பரிந்துரைத்தலாகும். அதன் அர்த்தம் மன்றாடுதல், அல்லது இன்னொருவருக்காக வேண்டுதல் செய்தலாகும். பரிந்து மன்றாடுதல் என்ற சொல் மற்றவர்களின் தேவைகளை நினைவு கூர்ந்து அவர்களுக்காக ஏறெடுக்கும் ஜெபமாகும்.
ஒரு குறிக்கப்பட்ட காலத்திற்கு சபைக்குருவை/பிரதம குருவை கண்டுபிடிக்கும் வரை நியமனத்தில் உள்ள குருவானவர். அவரின் பொறுப்புக்கள் அவரின் சலுகைகள் என்பன குறித்து அவரிடம் ஒரு ஒப்பந்தம் எழுத்தில் ஏற்படுத்தப்பட்டிருக்கும். இடைக்கால குருவானவருக்கு பிரதம குருவாகும் வாய்ப்பு வழக்கமாக கிடைப்பதில்லை.
சபை குரு அல்லாத ஞானஸ்நானம் பெற்ற சபையின் அங்கத்தவர். அதாவது அபிஷேகம் செய்யப்பட்ட பேராயரோ, குருவோ, டீக்கனோ அல்லாதவர்.
அன்றய தினத்தில் வாசிக்ப்படும் பரிசுத்த வேதாகமம் வைத்திருக்ப்படும் தாங்கி அல்லது மேசை. சில சமயங்களில் ஒரு கழுகின் வடிவில் அமைந்திருக்கும்
வழிபாடு நடத்தப்படும் முறைகளும் ஆசரிப்புகளும் சடங்காசாரங்களும்.
ஆண்டவரை வழிபடுவதற்கும் மற்றவகளுக்கு சேவை வழங்குவதற்குமென அர்பணத்துடன் செயல் புரிந்து வரும் சபையின் ஞானஸ்நானம் பெற்ற அனைத்து அங்கத்தவர்களும். சிலருக்கு பிரத்தியேகமான சேவைகள் இருக்கின்றன: மேற்பார்வையாளர், சபை பாடசாலை ஆசிரியர், பாடகர் குழு அங்கத்தவர், வழிபாட்டுக்கு உதவி புரிவோர் என செயல்படுகின்றனர். சபையின் சில சேவைகளில் ஈடுபடுவோர் பிதிஷ்டை செய்யப்பட்டிருக்க வேண்டும்.
வழிபாட்டில் பங்கு பெறுவதற்கு சபையினர் அமர்ந்திருக்கும் வாங்குகளும் கதிரைகளும் அடங்கிய ஆலயத்தின் முக்கிய பகுதி. நேவ் என்ற சொல்லின் கருத்து கப்பல், சபை அங்கத்தினரை ஒரு பயணத்தில் அழைத்து செல்கின்றதை விபரிப்பதாக அமைந்துள்ளது.
உலக பிரகாரமான முறையில் தம் வேதனத்தை பெற்றுக் கொண்டு சபையில் எந்த வித ஊதியத்தையத்தையும்
சபையினால் அழைக்கப்பட்டு, பரிசீலனை செய்யப்பட்டு, அங்கீகரிக்கப்பட்டு பின் தெரிந்தெடுக்கப்பட்டு பேராயரினால் பிரத்தியேக சேவைக்காக குருவாகவோ அல்லது டீக்கனாகவோ அபிஷேகம் பண்ணப்பட்ட ஒருவர்.
குருவானவராக அபிஷகம் பெறும் வழிபாட்டு முறை.
ஒரு குருவானவர், டீக்கன் அல்லது சாதாரண உறுப்பினர் சபைக்கு ஊழியம் செய்வதற்கென தெரிந்தெடுக்கப்பட்ட பிராந்தியம். மறை வட்டம் ஒன்றுக்கு மேற்பட்ட சபைகளைக் கொண்டதாக இருக்கலாம்.
மறை வட்டத்தின் தீர்மானங்களை நிர்ணயிக்கும் சபை. சில சபைகளில் அதனை ‘வெஸ்றி’ என்றும் அழைக்கின்றனர்.
ஒரு சபையில் வழிபடும் ஞானஸ்நானம் பெற்ற அங்கத்தவர்.
பரிசுத்த நற்கருணை ஐக்கியத்தின் போது அப்பம் பரிமாறப்படும் தட்டு.
ஊழியத்திற்கு அபிஷேகம் பெறுதற்காக பேராயரினால் உத்தியோக பூர்வமான அனுமதி கிடைக்கப்பட்ட ஒருவர்.
பிறிஸ்பிற்றரை விளங்கிக் கொள்ள குருவில் காணப்படும் விளக்கத்தை பாருங்கள். பிறீஸ்ட் என்ற சொல் பிறிஸ்பிட்டர் என்ற சொல்லின் குறுகிய அமைப்பாகும்.
பரிசுத்த நற்கருணையை நடத்தும் குரு அல்லது பேராயர்.
தேவ வார்த்தையாலும் புனித சடங்காசரங்களாலும் சேவை செய்வதற்கென பேராயரால் அபிஷேகம் பண்ணப்பட்ட ஒருவர். ஒரு குருவானவரின் சேவையானது கிறிஸ்துவினதும் அவரது சபையினதும் பிரதிநிதியாக தனது மக்களுக்கு ஆயராக, பேராயரோடு சபையின் மேற்பார்வையை பகிர்ந்து கொள்வதும்; சாக்கிரமெந்துகளை நடத்துவதும், சுவிசேஷத்தை பிரகடனப் படுத்துவதுமே ஆகும்.
ஒரு சபையின் பிறீஸ்ட்-இன்-சார்ஜ் அவரது நியமன காலத்தில் அந்த சபை பிரதம குருவானவரின் (அதற்கான விளக்கத்தை பார்கவும்) பணிகளையே செய்கின்றார். பேராயர் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு பித்தியேகமான நோக்கத்தை நிறைவேற்ற பிறீஸ்ட்-இன்-சார்ஜ் என்பவரை நியமிக்கின்றார்.
தேசிய சபையின் பிரதம தலைமை பீடம் வகிக்கும் பேராயர்.
1. அத்தியட்சாதீனத்தின் தொகுப்புக்கள். 2. அங்கிலிக்கன் ஐக்கியத்தில் அங்கம் வகிக்கும் ஒரு தேசிய சபை.
ஆலயத்தில் பிரசங்கம் செய்வதற்காக ஒதுக்கப்பட்ட பீடம் – தொடக்த்தில் ஒரு கப்பலின் வில் வடிவத்தை பிரதிபலிப்பதாக அமைந்திருந்த்து.
ஒரு சபையின் பொறுப்பை பேராயரிடமிருந்து பெற்றுக் கொண்ட குருவானவர். ரெக்டர் என்பதும் பிரதம குரு என்பதற்கும் அர்த்தம் ஒன்றே
ஆயினும் கனேடிய அங்கிலிக்கர் பிரதம குரு எனற சொல்லையே பாவிக்கின்றனர்.
பிரதம குரு (றெக்டர்) வசிப்பதற்காக வழங்கப்படும் வதிவிடம்.
பிராந்திய டீனறியின் தலைவராக நிர்வாக தலைமைத்துவ பொறுப்புக்களுடன் பேராயரால் நியமிக்கப்படும் குருவானவர்.
ஆலயத்தின் பலி பீடம் அமைந்துள்ள பகுதி
சபை குருக்கள் பயிற்சி பெறும் கல்வி பீடம் அல்லது கல்லூரி
தொடக்கத்தில் உப டீக்கன்கள் அத்தியட்சாதீன டீக்கன்களுக்கு உதவி வழங்குபவராக பலி பீடத்தில் அவர்களுக்கு உதவி செய்வதுடன் அந்த நாளுக்குரிய நிருப வாக்கியங்களை வாசிப்பதிலும் உதவி புரிந்து வந்தனர். ஆனால் இன்றோ உப டீக்கன் ஒரு சாதாரண அங்கத்தரவராக அதிகார பூர்வமான சலிஸ் உத்தியோத்தராக டீக்கன் இல்லாத போது நிருப வாக்கியங்ளை வாசிப்பராயும் பரிந்து மன்றாட்டு ஜெபங்களை ஏறெடுப்பராகவும் இருக்கின்றார்
பேராயர் முன்னய அங்கத்தவர் சபைகளின் பிரதிநிதிகள், அங்கீகாரம் பெற்ற சபை குருக்களை கொண்ட அதிகாரம் பெற்ற ஒரு சம்மேளனம். அத்தியட்சாதீனத்தின் உத்தியோக பூர்வமான கருமங்களையும் நடத்துவதற்கா குறிக்கப்பட்ட கால அவகாசங்களில் கூடுகின்றனர்.
வழிபாட்டுக்கென குருவினாலும் அவருக்கு பலி பீடத்தில் உதவி செய்பவராலும் அணியப்படும் ஆடைகள். மாறுபட்ட பாணிகளும் நிறங்களும் அந்தந்த காலங்களையும் பண்டிகைகளையும் குறிப்பதாக அமைகின்றன.
1. குருவானவர் வழிபாட்டுக்கென ஆடைகளை அணிந்து கொள்ளும் அறை.
2. சபைக்குரிய காரியங்களை நிர்ணயிக்கும் குழு. 3. கனடாவின் சில பகுதிகளில், சபையினருடைய வருடாந்த பொதுக் கூட்டம்.
பேராலயத்தில் (கத்தீட்றலில்) உள்ள டீனுக்கு உதவி வழங்குபதற்காக பேராயரால் நியமிக்கப்படுபவர்.