Skip To Content

ஆலயத்திற்கு செல்லுதல்

நீங்கள் அங்கிலிக்கன் ஆலயத்திற்கு செல்ல விரும்புகிறீர்களா? உங்கள் பகுதியில் உள்ள ஆலயத்தை கடந்து செல்லும் பொழுது உள்ளே என்ன நடக்கிறது என்பதை அறிந்து கொள்ளும் ஆர்வம் ஏற்பட்டிருக்கலாம். உங்களது நண்பர் உங்களை தனது ஆலயத்திற்கு வரும்படி அழைத்திருந்ததாலோ, திருமண வைபதிற்கோ அல்லது ஞானஸ்நானத்திற்கோ அல்லது ஆலயதினுள்ளே செல்வதற்கு உந்தப்பட்டோ நீங்கள் ஆலயத்திற்கு சென்றிருக்கலாம்.

என்ன காரணத்திற்காக நீங்கள் வந்திருந்தாலும் உங்களை நாங்கள் வரவேற்கின்றோம். முன்பு ஒரு முறையும் நீங்கள் ஆலயத்திற்கு சென்றிருக்காவிட்டாலும் அல்லது அதிக கால இடைவேளையின் பின் செல்வதாலும், நீங்கள் காண்பவைகளும் கேட்பவைகளும் உங்களுக்கு பரீட்சயம் இல்லாதவையாய் இருக்கலாம். இந்த வழிகாட்டி உங்களுக்கு உதவும்.

எவரும் ஆலயத்திற்கு செல்ல்லாமா?

ஆம், நிச்சயமாக! குறிப்பாக ஒரு புதிய ஆலயத்திற்குள் நுளையும் பொழுது உங்களுக்கு ஒரு பயம் ஏற்படலாம். நீங்கள் சரியானவற்றை தான் நம்ப வேண்டும் என்ற கட்டாயமும் இல்லை, கேள்விகள் (எதுவானலும்)  எல்லாவற்றிக்கும் விடை கிடைக்கவேண்டும் என்பதோ அல்லது ஒரு குறிப்பிட்ட வாழ்கைமுறை கொண்டவராய் இருக்க வேண்டும் என்பதும் இல்லை. நீங்கள் எந்த நிலையில் இருந்தாலும் உங்களை வரவேற்கின்றோம்.    

அநேகமான ஆலயங்களில் ஞாயிறு காலை வணக்க ஆராதனைகளில் தான் ஓன்று கூடும் சந்தர்ப்பம் ஏற்படுகின்றது. அநேகமான ஆலயங்களில் வாராந்தம் வெவ்வேறான ஆராதனைகளும், அறிவை அதிகரிப்பதற்கான வசதிகளும், செயல்பாடுகளும் நிகழ்சிகளும் நடைபெறும்.  இந்த நிகழ்சிகளில் பங்கு பற்றுவதற்கு நீங்கள் ஞாயிற்றுக்கிழமை காலை ஆராதனைக்கு ஆலயத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை

இணையத்துடனோ அல்லது ஆலயத்துடனோ தொடர்பு கொள்வதால் மேலதிக தகவல்களை பெற்றுக் கொள்ளலாம்.  பெரும்பாலும் புதிய நிகழ்வுகள், படங்கள், விடியோக்கள் ஆகியவற்றை ஆலயங்கள் தமது இணைய தளங்களில் பிரசுரிப்பர். மேலும் அத்தியட்சாதீனத்தில் என்ன நடக்கிறது என்பதை எமது events calendar ரில் கண்டறிந்து கொள்ளுங்கள்!     

ஒன்றிணைந்த ஆராதனை

ஞாயிற்றுக்கிழமைகளில் கிறிஸ்தவர்களாகிய நாம் ஆராதிக்கும் பொழுது ஒன்று கூடி வேதத்தை தியானிப்பதிலும், ஜெபம் பண்ணுவதிலும் ஓரு சமுதாயமாக சமூகமாக இணைகின்றோம். அநேகமான ஆலயங்களில் ஐக்கிய திரு விருந்தின் ஆராதனை அல்லது பரிசுத்த நற்கருணை ஆராதனை திரு விருந்தின் சடங்கு அல்லது மாஸ் என்றும் அழைக்கப்படுகின்றது. அதாவது நாம் திருவிருந்தின் ஐக்கியத்தில் அப்பத்தையும் திராட்சை இரசத்தையும் பெற்றுக் கொள்கிறோம்.

சில ஆலயங்களில் ஞாயிற்றுக்கிழமைகளிலும், வார நாட்களிலும் வேறு வகையான வழிபாட்டு முறைகளை கையாளுகின்றனர்.

நீங்கள் வர முன்பு

ஆலயத்தில் என்ன நடக்கின்றது என்பதை அறிந்த கொள்வதற்கான சிறந்த வழி அவர்களின் இணைய தளத்துடனோ அல்லது தொலை பேசி மூலமோ தெரிந்து கொள்வதே ஆகும்.   ரொரன்ரோ அத்தியட்சாதீனத்தின் ஆலயங்களின் இணைய தளங்களுக்கும் தொலை பேசி இலக்கங்களுக்கும் Find a Church  என்ற தளத்தை அணுகுங்கள்.   

ஆலயம் செல்வதற்கு குறிக்கப்பட்ட “ஆடை விதி” இல்லை. சிலர் சாதாரணமான உடையினையும், சிலர் முறைப்படியான உடைகளையும் அணிவர். உங்களுக்கு எது வசதியாய் உள்ளதோ அதையே அணிந்து கொள்ளுங்கள்.  

சிறுவர்கள் யாவரும் வரவேற்கப்படுகின்றனர்.  அநேகமாக பொதுவாக வழிபாட்டு நேரங்களிலே வேறுபட்ட வயதுள்ள சிறுவர்களுக்கான நிகழ்சிகள் வழங்கப்படுகின்றன அல்லது சிறுவர்களை உங்கள் கூடவே வைத்திருக்கலாம். எல்லா ஆலயங்களும் safe environment for kids வழங்குவதாகவே அமைந்துள்ளன.    

உங்கள் வருகையின் போது

ஆராதனை ஆரம்பமாவதற்கு சில நிமிடங்களுக்கு முன் வருவது நலமாயிருக்கும். உங்களுக்கு எங்கு அமர்வது வசதியாக உள்ளதோ அங்கேயே நீங்கள் அமர்ந்து கொள்ளலாம். ஆலய பிரகாரங்கள் சில சமயங்களில் வேறுபட்ட வடிவமைப்பை கொண்டதாக இருக்கலாம். சில இடங்களில் வாங்குகளும், சில இடங்களில் கதிரைகளும் இருக்கின்றன.

ஆராதனையில் பங்கு பற்றுவதற்கு இலகுவாக உங்களுக்கு சில வசதிகள் வழங்கப்படும். அவை துண்டுப் பிரதிகளாகவும், பாடல்களும் ஜெபங்களும் அடங்கிய புத்தகங்கள் ஆகவும் காணப்படலாம். சில இடங்களில் உங்களுக்கு தேவையான தகவல்கள் திரையில் பிரதிபலிக்க பட்டிருக்கும்

நீங்கள் வழிபாட்டில் பங்கு பெறுவதற்கு உதவி தேவைப்பட்டால் தயங்காமல் வரவேற்பாளாரிடமோ அல்லது உங்களுக்கு அருகில் உள்ளவரிடமோ கேட்டு அறிந்து கொள்ளுங்கள்.

சமாதானம்

ஆராதனை முடிவடைந்த பின் அநேகமான ஆலயங்களில் “தேநீர் வேளை” என்று அழைக்கப்படும் சிற்றுண்டி மற்றும் கலந்துரையாடலுக்கான நேரம் அனுசரிக்கப்படுகின்றது. நீங்கள் விரும்பினால் அதில் கலந்து கொள்ள அழைக்கப்படுவீர்கள். சபை குருவானவருக்கு உங்களை அறிமுகப்படுத்தி கேள்விகள் ஏதாவது இருந்தால் அவற்றை நீங்கள் சபைக் குருவிடமோ அல்லது சபை அங்கத்தவரிடமோ கேட்கலாம். இனி வரப்போகும் நிகழ்சிகளையும் ஆராதனைகளையும் குறித்த துண்டுப்பிரதிகளை எடுத்துச் செல்லுங்கள். அதி முக்கியம், திரும்பவும் வாருங்கள்! திரும்பவும் உங்கள் வருகையை ஆவலுடன் எதிர்பார்கின்றோம்.