Skip To Content

வாழ்வின் நிகழ்வுகள்

இப் பகுதியில் சிறப்பு நிகழ்வுகளிற்கான தகவல்களை பெற்றுக்கொள்ளலாம்:

ஞானஸ்நானம்

பிள்ளை பேற்றுக்கான நன்றி அறிவிப்பு

ஞானஸ்நானம் (“கழுவுதல்” என்ற கிரேக்க வினைச் சொல்லிருந்து) என்பது கிறிஸ்துவை ஏற்றுக் கொண்ட அனைவரும் திருச்சபை என்னும் ஐக்கியத்தில் தம்மை இணைத்துக் கொள்வதற்கான முதல் சடங்காசாரம். கிறீஸ்த்தவர் அனைவரும் பெரியவராயினும் சிறியவராயினும் நீரினால் பரிசுத்த திருத்துவத்தின் பெயராலே: பிதா, குமாரன், பரிசுத்த ஆவியால் ஞானஸ்நானத்தை பெற்றுக் கொள்கின்றனர். 

ஞானஸ்நானம் இயேசு நாதர் வலியுறுத்திய இரண்டு புனித சடங்காசரங்களில் ஒன்றாகும். மற்றது தூய நற்கருணை என்று அழைக்கப்படும் திரு விருந்தாகிய அப்பமும் திராட்சை இரசமுமாகும்.   

தனி நபர்களாகவே ஞானஸ்நானத்தை பெற்றுக் கொண்டாலும்,  கீழ் கூறபட்டவற்றை நிறைவேற்ற  உறுதி கொண்டுள்ள விசுவாசமுள்ள சமூகத்தினருடன் தம்மை இணைத்துக் கொள்கின்றனர்:

  • தளர்ந்து போகாமல் தீமையை எதிர்த்து செயல்படுதல்l
  • கடவுள் மன்னிக்கிறது போல ஒருவரை ஒருவர் மன்னித்தல்.
  • கிறிஸ்த்து நாதரை எல்லோரிடத்திலும் கண்டறிந்து பணி புரிதல்
  • ஒவ்வொரு மனிதரின் தனித்துவமான கண்ணியத்தையும் மதித்து நீதியையும் சமாதானத்தையும் பேண முயற்சித்தல்
  • கடவுளின் சிருஷ்டிப்பினை பாதுகாப்பதுடன்
  • பூமியில் வாழ்வதனை மதிப்புடன் பேணி புதிப்பித்தல் 

ஞானஸ்நானத்திற்கென பிள்ளைகளை அழைத்து வரும் பெற்றோர் தமது பிள்ளைகளை கிறிஸ்தவ சமூகத்தின் விசுவாச வாழ்க்கையில் வளர்க்கும் பொறுப்பினை உறுதிப்படுத்துகின்றனர்.

ஞானஸ்நானம் பெற்ற அனைவரும் தமது நேரத்தையோ, தமது தாலந்துகளையோ அல்லது நிதி வழங்களையோ தேவ ஊழியத்திற்காக கொடுக்கும்படி ஊக்குவிக்கப்படுகின்றனர்.    

பிள்ளை பேற்றுக்கான நன்றி அறிவிப்பு 

பிள்ளை பேற்றுக்கான நன்றி துதி ஆராத்தனை சபைகளில் நடத்தலாம். இந்த ஆராதனை தாம் பெற்றுக் கொண்ட பிள்ளைக்கான நன்றி செலுத்தும் தருணத்தையும், தேவ தயவிற்காக ஜெபிக்கும் தருணத்தையும் பெற்றோருக்கு வழங்கின்றது.  

அடுத்து நடப்பவை

நீங்கள் அல்லது உங்கள குழந்தைக்கு ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ள விரும்பினாலோ அல்லது பிள்ளை பேற்றுக்கான நன்றி துதி ஆராதனை நடத்த விரும்பினாலோ உங்கள் சபை போதகரிடம் அல்லது contact your local Anglican church  என்ற தேடல் மூலமோ தொடர்பு கொள்ளுங்கள்.

திடப்படுத்தல்

இறுதி சடங்குகள்