-
எங்கே எனது ஆலயம் அமைந்துள்ளது?
ஆலயம் தேடுதல் Find a Church, என்ற தேடல் தளத்தில் எங்கள் அத்தியட்சாதீனத்தில் உள்ள எல்லா ஆலயங்களையும் ஒவ்வொன்றின் தொடர்பு விபரங்களுடன் நீங்கள் கண்டு கொள்ளலாம். முகவரி அல்லது தபால் குறியீடு என்பவற்றின் உதவியுடனும் உங்களுக்கு சமீபமாக அமைந்துள்ள ஆலயத்தை கண்டுகொள்ளலாம்.
-
எங்கே நான் ஞானஸ்நான, விவாக அல்லது மரித்தோர் அடக்கத்திற்கான பதிவுகளை பெற்றுக்கொள்ளலாம்?
எங்களது Archives என்ற இணைய தளத்திற்கு சென்றால் மேலதிக தகவல்களை பெற்றுக் கொள்ளலாம். இந்த தளம் உங்களது பரம்பரையினரை பற்றி ஆராயவும், சபையின் ஆண்டு விழாக்களை அறிந்து கொள்ளவும் அல்லது உங்களுக்கு வரலாற்றில் ஆர்வம் இருந்தால் அதனை அறிந்து கொள்ளவும் உதவும்.
-
நான் விடுமுறைக்காக மேலே வடக்கு நோக்கி போகப்போகிறேன்; நான் எந்த ஆலயத்திற்கு போகலாம்?
Find a Church, என்ற தளத்தில் நீங்கள் செல்லப்போகும் நகரத்திற்கு அண்மையில் உள்ள ஆலயங்களை கண்டு கொள்ளலாம். அந்த ஆலயத்தின் இணைய தளத்திற்கு சென்றோ அல்லது தொலைபேசி மூலமோ மேலதிக தகவல்களை பெற்றுக் கொள்ளலாம். அனேக வேளைகளில் ஆலயங்கள் தமது வழிபாட்டு நேரங்களை தமது தொலைபேசி செய்திகளில் பதிவு செய்திருப்பார்கள். எங்களது அத்தியட்சாதீனத்திற்கு வெளியே பயணம் செய்தால் கனடா முழுவதிலும் உள்ள ஆலயங்களை கண்டு கொள்ள findachurch.ca என்ற இணைய தளத்தில் தேடுங்கள்.
-
எங்கே நான் ஆங்கிலத்தை தவிர்ந்த வேறு மொழியிலான அங்கிலிக்கன் வழிபாட்டில் கலந்து கொள்ளலாம்?
Find a Church என்ற இணைய தளத்தில் வேறு மொழிகளிலான வழிபாட்டை நடத்தும் ஆலயங்களின் பட்டியலை கண்டு கொள்ளலாம்.
-
நான் எவ்வாறு அங்கிலிக்க ஆலயத்தில் திருமணம் செய்து கொள்ளலாம்? கட்டணம் எவ்வளவு செலவாகும்?
சபைக்கு சபை, நடைமுறைகள் வேறுபடலாம், எனவே நீங்கள் திருமணம் செய்ய விரும்பும் சபை குருவிடம் தொடர்பு கொண்டு மேலதிக விபரங்களை பெற்றுக் கொள்ளுங்கள். அத்தோடு Life Events பக்கத்திற்கு சென்று அங்கிலிக்கன் திருமணங்கள் பற்றிய பொதுவான தகவல்களையும் பெற்றுக் கொள்ளுங்கள்.
-
எங்கே நான் திருமண ஆயத்த வகுப்புகளை குறித்து அறிந்து கொள்ளலாம்?
உங்களுக்கு திருமணம் செய்து வைக்கப்போகும் குருவானவர் உங்கள் பகுதியில் இருக்கும வகுப்புகளுக்கான விபரங்களை உங்களுக்கு தருவார்.
-
அங்கிலிக்கன் சபை விவாகரத்து செய்தோரை மணம் முடித்து வைக்கின்றதா?
ஆம், கொள்கையின்படி, இருப்பினும் முதல் அத்தியட்சாதீனத்தின் பேராயரிடம் இருந்து அனுமதி பெற்ற பின்னரே இது சாத்தியமாகும். சபைக் குருவினூடாக நீங்கள் அனுமதி பெற்று கொள்ள வேண்டும் (பாருங்கள் Life Events.)
-
அங்கிலிக்கன் சபை ஒரே பாலாரின் திருமணத்தை நடத்துகிறதா?
எமது அத்தியட்சாதீனத்தில், தெரியப்பட்ட சில குருக்களே குறிக்கப்பட்ட சூழ்நிலைகளில் ஒரே பாலானோரின் திருமணத்தை நடத்தி வைக்க அனுமதிக்கப்படுகின்றனர். மேலும் அறிந்து கொள்ள, பார்க்க வேண்டியது Same-Sex Marriage page.
-
ஒரு பூங்காவில்/எனது வீட்டில்/பாரம்பரியமான கட்டிடம் ; போன்ற இடங்களில் அங்கிலிக்கன் குருவானவர் எனது திருமணத்தை நடத்துவாரா?
ஆம், அங்கிலிக்ன் திருமணம் ஆலயத்திற்கு வெளியே நடப்பது சாத்தியமாகும். மேலதிக தகவல்களுக்கு உங்களது சபை குருவானவரிடம் கலந்துரையாடுங்கள். (மேலதிக தகவல்களுக்கு Life Events.)
-
நான் எவ்வாறு எனது குழந்தைக்கு ஞானஸ்நானம் கொடுப்பேன்? அங்கிலிக்ன் ஆலயத்தில் ஞானஸ்நானம் செய்வதற்கான தகமைகள் என்ன?
ஞானஸ்நானம் என்ற பகுதியில் உள்ள எங்கள் Life Events page உங்களுக்கு பொதுவான தகவல்களை வழங்குகின்றது, இருப்பினும் உங்களது சபை குருவானவர் உங்களுக்கு வேண்டிய சகல தகவல்களையும் விபரமாக வளங்குவார்.
-
எப்பொழுது, எங்கே, எப்படி நான் திடப்படுத்தலை பெற்று கொள்ளலாம்?
திடப்படுத்தல் சம்பந்தமான சகல தகவல்களையும் உங்கள் சபை குருவானவர் உங்களுக்கு வளங்குவார், அது என்ன என்பதையும் அதன் வினைவுகள் என்ன என்பதையும் அவர் விளக்குவார். நீங்கள் எவ்வாறு திடப்படுத்தல் வகுப்புகளுக்கு செல்லலாம் என்ற தகவல்களையும் உங்களுக்கு அவர் தருவார். (See Life Events.)
-
எனது மறை வட்டத்தின் பிராந்திய பேராயர் யார்?
எங்கள் பேராயர் யாவரும் Episcopal Areas என்ற பக்கத்தில் அட்டவணை படுத்தப்பட்டிருக்கிறார்கள்.
-
எந்த ஆலயங்களில் ஞாயிறு பாடசலைகள் அல்லது சிறுவருக்கான வகுப்ப்புகள் நடை பெறுகின்றன?
பெருமபாலான ஆலயங்கள் இவற்றை நடாத்துகின்றன, இருந்தாலும் உங்களுக்கு விருப்பமான குறிக்கப்பட்ட சபையுடன் தொடர்பு கொள்ளுங்கள். (Find a Church)
-
உங்களிடம் கிறிஸ்மஸ், ஈஸ்டர் போன்ற விசேஷ வழிபாடுகளுக்கான தகவல் உள்ளதா?
ஒவ்வொரு சபையும் தமக்கென்ற விசேஷ வழிபாடுகளை வைத்திருக்கின்றனர். நீங்கள் எங்கு செல்ல விரும்புகிறீர்களோ அந்த ஆலயத்துடன் தொடர்பு கொண்டு தகவல்களை பெற்றுக் கொள்ளுங்கள் (Find a Church)
-
கிறிஸ்தவ விடுமுறை நாட்களை வருடங்களுக்கு முன்னமே அறிந்து கொள்ளும் சாத்தியம் உள்ளதா?
அங்கிலிக்கன் சபை விபரங்கள் அடங்கிய புத்தகம் 2016 Movable Festivals என்ற தளத்தில் கண்டறிந்து கொள்ளுங்கள்.
-
வாடகைக்கு ஆலய மண்டபம் ஒன்றினை வாடகைக்கு நான் எங்கு கண்டு கொள்ளலாம்?
இவற்றை தனிப்பட்ட ஆலயங்களே நிர்வகிப்பதால் நீங்கள் நேரடியாகவே உங்கள் ஆலயத்துடன் தொடர்பு கொள்ளுங்கள். (Find a Church)
-
நான் குருவானவருக்கு ஒரு கடிதம் எழுதுவதானால்; எவ்விதம் அந்த கடிதத்தினையும், கடித உறையையும் முறமைப்படுத்துவேன்?
அங்கிலிக்கன் சபைகளில் ஏற்றுக் கொள்ளப்படும் அழைப்பு முறைகளுக்கு Forms of Address for Clergy. செல்லுங்கள்.